2019 ஆம் ஆண்டில் மாயமாகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

0

அமெரிக்காவின் நியூ யார்கில் 2019 ஆம் ஆண்டில் காணாமற்போன ஓர் இளம் அமெரிக்கப் பெண், வீட்டுப் படிக்கட்டுக்குக் கீழிருந்த ரகசிய அறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பைஸ்லீ ஷுல்டிஸுக்கு (Paislee Shultis) கடந்த திங்கட்கிழமை 14 ஆம் திகதி பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையில் அவர் சாகர்டீஸ் (Saugerties) நகரின் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்போது நலமாக உள்ள பைஸ்லீ, தன்னைப் பராமரிக்கும் பாதுகாவலருடனும் அக்காவுடனும் மீண்டும் இணைந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நியூயார்க்கிலுள்ள டியோகா கௌண்டியில் (Tioga County) பைஸ்லீ காணாமற்போனதாக பொலிஸாரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது.

அவரின் பெற்றோர் கிம்பர்லி கூப்பரும் (Kimberly Cooper) கர்க் ஷுல்டிஸ் ஜூனியரும் (Kirk Shultis Jr) அவரைக் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாகர்டீஸ் நகரின் ஒரு வீட்டில் பைஸ்லீ இருப்பதாகத் தகவல் கிடைத்த பின்னர், வீட்டைத் தேடுவதற்கான கைதாணையைக் காவல்துறையினர் பெற்றனர்.

அந்த வீட்டில் முன்னதாக சோதனை நடத்தப்பட்டது.

காவல்துறையினர் வீட்டைத் தேடியபோது அதன் உரிமையாளர் கர்க் ஷூல்டிஸ் சீனியர் (Kirk Shultis Sr), பைஸ்லீ எங்கே இருக்கிறார் என்பது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.

ஆனால் ஒரு மணித்தியாலத்திற்கு பின், வீட்டின் கீழ்த்தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் விசித்திரமாகக் கட்டப்பட்டிருப்பதை அதிகாரி ஒருவர் கண்டுள்ளார்.

பல பலகைகளை அகற்றிய பின்னர், பைஸ்லீயும் தாயார் கூப்பரும் அங்கு ஒளிந்துகொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர்.

பைஸ்லீ காணாமற்போனதன் தொடர்பில், கூப்பர், ஷுல்டிஸ் ஜூனியர், ஷூல்டிஸ் சீனியர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here