2000 ரூபாய் கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய தகவல்!

0

2000 ரூபா கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்த 7,27,339 குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபாய் வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

18 மில்லியன் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் அலுவலகத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என அவர் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here