200 நாட்களாகத் தொடரும் உக்ரைன் ரஷ்ய போர்!

0

உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 200 நாட்கள் கடந்துள்ளன.

ஹார்கிவ் (Kharkiv) பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் உக்ரேனியப் படைகள் செப்டம்பர் மாதத்திலிருந்து 3,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை மீட்டுள்ளனர்.

ஹார்கிவிலுள்ள இஸியும் (Izyum) நகரைவிட்டு ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யப் படைகளின் தளவாட நடுவமாகச் செயல்பட்ட அந்நகரில் ஆயுதங்களும் கருவிகளும் விட்டுச்செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இஸியும் மீண்டும் உக்ரேனின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதிசெய்தார்.

ரஷ்யா உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹார்கிவில் உள்ள மின்சார விநியோக நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஹார்கிவ், டொனெட்ஸ்க் (Donetsk) பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here