ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டின் நில அதிர்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்து நாட்டில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டடு வருகிறது.
இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
இதேவேளை இந்த நில அதிர்வுகளின் காரணமாக எரிமலைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.