20 ஆண்டுகளுக்கு பின் இணைகிறோம்…. அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

0

சூர்யா அடுத்ததாக பாலாவுடன் இணைய உள்ளதாக வெளியான செய்தியை சூர்யாவே உறுதிப்படுத்தியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக பாலாவுடன் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது இந்த செய்தியை சூர்யாவே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது…

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என பதிவுட்டுள்ளார்.

பாலா – சூர்யா கூட்டணி ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது மீண்டும் உருவாகியுள்ள இந்த கூட்டணியில் சூர்யா நடிக்கவுள்ளாரா அல்லது வெறும் தயாரிப்பு மட்டும்தானா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here