2 நாய்களால் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலி….

0

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிய வீட்டின் தோட்டத்தில் விளையாடிய 3 வயது சிறுவன் அயலவரின் நாய்கள் கடித்துக்குதறியதில் பலியாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவன் அஜீஸ் அகமதுவின் அலறல் சத்தம் கேட்டு, காப்பாற்ற விரைந்து சென்ற தாயாரையும் அந்த நாய்கள் பதம் பார்த்துள்ளது.

அவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்.

அஜீஸின் இன்னொரு சகோதரன், வெறி கொண்ட நாய்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக கூறப்படுகிறது.

புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்த நிலையில், அந்த குடும்பம் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

தமது பிஞ்சு மகனை அண்டை வீட்டாரின் 2 Pit Bull நாய்கள் கடித்துக்குதறுவதை கண்டு, தன்னால் முடிந்த அளவுக்கு அந்த தாயார் போராடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், இரண்டு நாய்களையும் கருணைக்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here