2 கோடி ரூபா நிதியுதவி வழங்கிய விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா

0

கொரோனா தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிக்க மொத்தம் 7 கோடி இந்திய ரூபா நிதி திரட்டும் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் 2 கோடி ரூபாவை நன்கொடையாக அளித்துள்ளனர்.

விராட் கோலி மற்றும் போலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்தியாவில் கொவிட் நிவாரணத்திற்காக 7 கோடி ரூபாவை திரட்ட இலக்கு வைத்துள்ளனர்.

இந்த முயற்சிக்கு ஒரு பகுதியாக அவர்கள் 2 கோடி ரூபாவை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இது குறித்து வெளியி்ட்ட அறிவிப்பில் விராட் கோலி கூறியிருப்பதாவது,

நானும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து கொரோனா நிவாரண நிதியான 7 கோடி ரூபாவை திரட்ட முடிவு செய்தோம்.

இதற்காக கெட்டோ தளத்தில் இருவரும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். அதில் முதல் பங்களிப்பாக இருவரும் 2 கோடி ரூபாவை வழங்கியுள்ளோம்.

இந்தப் பிரச்சாரம் 7 நாட்கள் நடக்கும், அதன்பின் அந்த நிதி ஏ.சி.டி அமைப்புக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்சிஜன், மருத்துவ வசதிகள், தடுப்பூசி விழிப்புணர்வு, தொலைபேசி மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

நாட்டின் சக மக்களுக்காக மக்கள் முன்வந்து அதிகமான உதவிகளை வழங்குவார்கள் என நம்புகிறோம்.

நாம் ஒன்றாக இணைந்தால், இந்த பெருந்தொற்றை கடந்து வர முடியும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here