1998க்கு அழைத்தால் 1998 ரூபா நிவாரணப் பொதி வழங்கும் இலங்கை அரசாங்கம்!

0

இலங்கை மக்களுக்கு சதொச மூலம் 20 பொருட்களின் நிவாரணப் பொதி இன்று முதல் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அரிசி, மா, சீனி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நாடு முழுவதும் நுகர்வோருக்கு 1998 ரூபா விலையில் சதொச நிறுவனம் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

பொதிகளைப் பெற 1998 ஹொட்லைன் அல்லது www.lankasathosa.lk மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் இந்நிவாரணப் பொதிகள் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சதொச விற்பனை நிலையங் களிலிருந்து 24 மணி நேரத்துக்குள் விநியோகக் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இந்தச் சேவையை இரு வாரங்களுக்கு செயற்படுத்த வுள்ளதாகவும் இதற்காக 500 லங்கா பெல் மோட்டார் சைக்கிள் ஊழியர்கள் நிவாரணப் பொதிகளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்க வுள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்.

இந்நிவாரணப் பொதியில் 2 கிலோ கிராம் சிவப்புபச்சை அரிசி, 1 கிலோகிராம் வெள்ளைப் பச்சை அரிசி,1 கிலோ கிராம் நாட்டரிசி, பருப்பு, கோதுமை மா, நெத்தலிக்கருவாடு, தேயிலை, செத்தல் மிளகாய், மிளகு, வெள்ளைச் சீனி, பிறவுன் சீனி என்பன அடங்கியுள்ளன.

சந்தையில் இப்பொருட்களின் வழமையான விலை 2600 ரூபாவுக்கும் அதிகம் என வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here