19 வயது இளம் பெண்ணின் உடல் பாகங்களை வெட்டி கொன்ற கொடூரம்…!

0

கஜகஸ்தானில் Almaty நகரில் கடந்த மார்ச் 19 ஆம் திகதி 19 வயதான Ayazhan Yedilova மாயமாகியுள்ளார்.

அவரை தேடிப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

அதே பகுதியில், மார்ச் 22-ஆம் திகதி ஒரு குப்பை மேட்டில் சில மனித உடல் பாகங்களை பொலிஸ் கண்டெடுத்து பரிசோதனையில் அவை Yedilovaவின் உடல் தான் என தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரை கண்காணித்து அவரது வீட்டிற்கு சென்றனர்.

பொலிஸ் வருவதை தெரிந்துகொணட அந்த நபர் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வீட்டில் மயங்கிக்கிடந்தார்.

அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

வீட்டை சோதனை செய்ததில் அங்கு இருந்ததை பார்த்து பொலிஸ் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அங்கு ஒரு குக்கரில் Yedilovaவின் தலை வேகவைக்கப்பட்டிருந்தது.

அவரது பற்கள், நகங்கள் அணைத்தும் தனித்தனி கவரில் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் சில உடல் பாகங்கள் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கிடந்தன.

Yedilova கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணையில் சந்தேக நபர் Turkestan நகரத்தை சேர்ந்த Ruslan (28) என்பது தெரியவந்தது.

அவர் ஒரு Pharmacist என்றும், அவர் வேலைக்காக Almaty பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

மார்ச் 19ஆம் திகதி Yedilova, Ruslan-ன் வீட்டுக்கு இயல்பாக வந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், மேற்பட்ட விசாரணையில் பொலிஸ் ஈடுபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here