18 வருடங்களுக்கு பின் 4 குழந்தைகளை பிரசவித்த பெண்….

0

இந்தியாவில் கேரள மாநிலம் அதிரம்புழ பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்.

இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில் பிரசன்னா குமாரி திடீரென கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கள் குழந்தையை இருவரும் சந்தோஷமாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி பிரசன்னா குமாரிக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் நான்கு பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 4 பெண் குழந்தைகளையும் பாதுக்காப்பாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

தற்போது 4 குழந்தைகள், குழந்தைகளை பெற்றெடுத்த தாய் மற்றும் மருத்துவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here