17 வயது மாணவியை சீரழித்த இளைஞரின் மோசமான செயல்…

0

இந்தியாவில் சென்னை, ஆவடி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை துஷ்பிரயோகம் செய்த வாலிபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் மெயின் ரோட்டில் ஒரு தம்பதியர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 17 வயதில் பிளஸ் 2 படித்து வரும் மகள் ஒருவர் இருக்கின்றார்.

இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இவர்களது உறவினரான ஜோதி 24 வயது இளைஞர் கடந்த ஒரு ஆண்டாக சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சென்ற ஜோதி, திருமண ஆசைகாட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்த விசயம் தற்போது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் பொலிஸார் சிறுமியை பலாத்காரம் செய்த ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள ஜோதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here