17 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

0

இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூங்கிய போது, அதன் பின் 13 நாட்கள் உறங்கியுள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இது Kleine-Levin நோயின் அறிகுறி, இது ஒரு மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கும், மிகவும் அரிதிலும், அரிதான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும், எந்த ஒரு பலனும் இல்லை.

சிறுமியின் பெற்றோர், அவள் தூங்கும்போதெல்லாம் அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்று தெரியாததால் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

அவர் இது போன்ற நிலையில் இருக்கும் போது, நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

Kleine-Levin-க்கு இதுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த சிறுமி தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதால், இவரைக் கண்ட இணையவாசிகள், விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும், நிஜ வாழ்க்கையில் ஒரு Sleeping Beauty என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here