17 ஆண்டுகளுக்கு பின் இறந்த மகனை சந்தித்த தாய்…!

0

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாங் காய்ஹாங் என்ற பெண்.

இவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்துள்ளார்.

அண்மையில் தன்னுடைய மகன் இறக்கவில்லை என்றும் தனது உறவினரின் அண்ணியால் கடந்த 2005ஆம் ஆண்டு திருடப்பட்டதையும் அறிந்திருக்கிறார்.

ஜாங் கர்ப்பமாக இருந்த போது அவருடைய முன்னாள் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவார் என பயந்து உறவுக்காரனின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்.

அங்கு வசித்து வந்த நிலையில் ஜாங் காய்ஹாங்கிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால் பிறந்த குழந்தையின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது என ஜாங்கிடம் அந்த உறவுக்காரரின் அண்ணி கூறியிருக்கிறார்.

மேலும் குழந்தைக்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதால் விட்டுச் செல்லும்படி ஜாங்கை அந்த அண்ணி வற்புறுத்தியிருக்கிறார்.

சில நாட்களுக்கு பின்னர், ஜாங்கின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அந்த அண்ணி கூறியிருக்கிறார்.

இதனால் இத்தனை ஆண்டுகளாக தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவே ஜாங் காய்ஹாங் எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய உறவுக்காரரின் அண்ணி கூறியது அனைத்தும் பொய் என உணர்ந்தோடு தன்னுடைய மகன் இறக்கவில்லை.

அவன் தற்போது பள்ளியில் படித்து வருவதையும் அறிந்திருக்கிறார்.

இதனையடுத்து தன்னுடைய மகனை கண்டறியும் பணியில் ஜாங் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்..

பிறகு, டி.என்.ஏ பரிசோதனை செய்ததில் அந்த உறவுக்காரரின் அண்ணியிடம் இருப்பது தன்னுடைய மகன் என உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜாங்கின் மகனை தான் வளர்த்து வந்ததால் அதற்கான நஷ்டயீடை கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லும்படி அண்ணி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாங்கின் மகனை தன்னுடைய பாதுகாப்பில் அடைத்து வைத்திருக்கிறார்.

ஆனால் சட்டப்படி தத்தெடுத்து வளர்த்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் பணம் கொடுக்க முடியாது என ஜாங் மறுத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here