16 வயது மகன் மற்றும் தாயின் கொடூரச் செயல்…. பரிதாபமாக பலியாகிய பிள்ளைகள்…

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏஞ்செலா டான் ஃப்ளோர்ஸ் (38) என்ற பெண் தனது 4 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில் தான் கான்சாஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஃப்ளோர்ஸ் வீட்டில் இருந்து என் குடும்பம் என்னை கொடுமைப்படுத்துகிறது என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதனைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான கேனல்ஸ் என்ற பெண் வெளியே பார்த்தபோது, ஃப்ளோர்ஸ் கையில் பைபிள் மற்றும் மெழுகுவர்த்தியுடன் பக்கத்து வீட்டு முற்றத்திற்கு நடப்பதை கண்டுள்ளார்.

ஏதோ தவறு நடக்கிறது என்று அவர் உணர்ந்துள்ளார்.

இதற்கிடையில் ஃப்ளோர்ஸின் பதின்பருவ மகன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்தபோது, ஃப்ளோர்ஸின் நடாலி ஃப்ளோர்ஸ்(12), கெவின் யனெஸ்(10), நாதன் யனெஸ்(8) ஆகிய மூன்று பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிசார், ஃப்ளோர்ஸை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தனது மூன்று பிள்ளைகளுக்கும் பேய் பிடித்ததால் இவ்வாறு செய்ததாக அதிர்ச்சியளித்தார்.

பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃப்ளோர்ஸ், 16 வயது மகனுடன் சேர்ந்து ஒரு கொலையை செய்ததாக தெரிவித்தார்.

மேலும், மூன்று கொலை வழக்குகளை எதிர்கொள்வதால் தன் மீதான விசாரணையை தாமதப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். அ

வருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அதற்காக 6 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன் பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பெண்கள் சிறையில் ஃப்ளோர்ஸ் அடைக்கப்பட்டார்.

அவர் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃப்ளோர்ஸின் 16 வயது மகன் சிறார் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here