16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது..!

0

இந்தியாவில் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் ஒக்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் வயது 41.

இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு சிறிது நேரத்தில் புகார் கிடைத்ததையடுத்து அங்கிருந்து அணைக்கட்டு வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் திருமணமான மண மக்களையும், இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

41 வயதுடைய ஒருவருக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததற்காக மாணவியின் தந்தை மீதும், மணமகன் சுரேஷ் மீதும் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுமியின் தந்தை பொன்னுசாமிக்கு 40 வயது.

அவர் தன்னை விட ஒரு வயது மூத்த ஒருவருக்கு தன் மக்களை கட்டிக்கொடுத்த இந்த சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here