16 வயதில் கோடீஸ்வரியான பிரித்தானிய பெண்ணிற்கு நேர்ந்த கதி

0

பிரித்தானியாவிலுள்ள Cumbria என்ற இடத்தில் அதிவேகத்தில் சென்ற ஒரு காரை துரத்திச் சென்ற பொலிசார், பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி மடக்கிப்பிடிக்கும் அளவுக்கு அந்த காரின் சாரதி கட்டுப்பாடில்லாமல் இருந்தார்.

அவர் கொக்கைன் என்னும் போதைப்பொருள் பயன்படுத்தியமையால் கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பிரித்தானியாவிலேயே மிகவும் சிறிய வயதில் லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்று கோடீஸ்வரியான Callie Rogers (33) அவ்வாறு வாகனத்தை செலுத்தியுள்ளார்.

அவ்வளவு பெரிய தொகையை வென்றும், 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று அரசின் நிதியுதவியைப் பெற்று அவர் வாழ்வது தெரியவந்தது.

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே செல்வோரை சோதனையிடும் வேலையில், வெறும் 3.60 பவுண்டுகள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் Callieக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.

பணம் வந்ததும் . Nicky Lawson என்பவரை மணந்தார் Callie, 180,000 பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகைக்கு குடியேரினர் பின் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.

ஆனால், ஐந்தே ஆண்டுகளில் காதல் கசந்தது, தற்கொலைக்கு முயன்றார் Callie.

ஒரு கட்டத்தில் பிள்ளைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டார்கள்.

அப்போதும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக, 17,000 பவுண்டுகள் செலவு செய்து மார்பக அழகு சிகிச்சை செய்துகொண்டார் Callie.

கடைசியில் எல்லாம் இழந்து, இன்று அரசின் நிதியுதவியை நம்பி வாழ்ந்துவருகிறார் Callie.

நான் கடந்து வந்த பாதையில் வந்த உயர்வு தாழ்வுகளை மறந்து ஒரு சாதாரண நபராக உணர விரும்புகிறேன்.

ஆடம்பர உடைகள், நண்பர்கள், பார்ட்டி என வாழ்ந்த அந்த காலம் எல்லாம் பறந்துபோய்விட்டது, இப்போதிருக்கும் இந்த வாழ்வைத்தான் விரும்புகிறேன் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here