15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள்! புதிய கண்டுபிடிப்பு

0

கொரோனா தொற்று தொடர்பில் விஞ்ஞானிகள் பல பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்த விலையில், பதினைந்து நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெற்றுத்தரும் அதிவேக கொரோனா சோதனை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோவிலுள்ள Strathclyde பல்கலைக்கழக அறிவியலாளர்கள் குழுவே இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளது.

நீரிழிவு பிரச்சினை கொண்டோர், உடனடியாக இரத்த சர்க்கரை கண்டறியும் சோதனை செய்வதற்காக பயன்படுத்தும் glucose test stripsஐ போன்று தங்களுக்கு இந்த திட்டம் உதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சோதனைக்கு நோயாளியின் எச்சில் ஒரு துளி போதுமானது.

இந்த சோதனை கிட்டில் வைத்து அதை ஒரு இயந்திரத்துக்குள் செலுத்தினால், பதினைந்தே நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என அறிய முடியும்.

இச்சோதனையின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், அதற்கான கட்டணம் வெறும் 16 சதங்கள் மட்டுமே செலவிடப்படும்.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த சோதனை சந்தைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here