15 தெருநாய்கள் சிறுமியை கடித்து குதறிய சம்பவம்…!

0

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தின் Aligarh பகுதியில் 15 தெருநாய்கள் சிறுமியை விரட்டி கடித்து விரட்டிய வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதற செய்கிறது.

கடந்த திங்கட் கிழமை சிறுமி ஒருவர் தீப்பெட்டி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தெருவில் இருந்த நாய்கள் சில அந்த சிறுமியை பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளன.

சிறுமி பயந்து போய் ஓட முயன்றதால், அருகில் இருந்த சுமார் 15 தெருநாய்கள், அந்த சிறுமியை விரட்டி கடிக்க ஆரம்பித்துள்ளன.

சிறுமியின் சத்தம் மற்றும் நாய்களின் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து நாய் கூட்டத்தை விரட்டினர்.

இருப்பினும் சிறுமிக்கு காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here