14 வயதான சிறுமியை திருமணம் செய்த 60 வயதுடைய நபரால் சர்ச்சை

0

பாகிஸ்தானில் எம்.பியாக உள்ள மவுலனா சலாவுதின் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பில் சிறுமியின் தந்தை பேசியுள்ளார்.

ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தரும், எம்பியுமான மவுலனா சலாவுதினுக்கு வயது 60ஐ நெருங்குகிறது.

அவர் சமீபத்தில் 14 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்தது.

பாகிஸ்தானில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை மணப்பது சட்டபடி குற்றமாகும்.

குறித்த சிறுமியின் தந்தை முதலில் தனது மகளுக்கு திருமணம் ஆனதை மறுத்து வந்துள்ளார்.

அதன்படி, சலாவுதினுக்கும் சிறுமிக்கும் முறைப்படியான திருமணம் இன்னும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு 16 வயது ஆகும் வரை யாரிடமும் அனுப்ப மாட்டேன் என்று அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here