14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய முதியவர்….!

0

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் வசித்து வருபவர் காமேஷ் சந்திர ஸ்வைன்(54).

இவர் இதுவரை 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

அதில் அவர் 14 பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

இவருக்கு 1982 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் முதல் திருமணம் நடைபெற்றது.

பின்னர் திருமண மேட்ரிமோனி இணையதளத்தில் கணவனை இழந்த பெண்களையே குறிவைத்து அவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு திருமணங்கள் மூலம் இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து காமேஷ் சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவரை போல் நடித்து பல பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.

கடைசியாக பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இவர் கணவரை இழந்து தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தான் காமேஷின் செயலை கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here