உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 50 நாளைக் கடந்து தொடர்ந்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கி அழித்துள்ள ரஷ்யப்படை தரப்பிலும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போரைத் தொடுத்த ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியிலான தடைகளை அறிவித்துள்ளனர்.
தற்போது 14 ரஷ்ய நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதிப்பதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் போக்குவரத்துத் தொடர்பான நிறுவனங்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.