13 வயது சிறுவனை சுட்டுக் கொலை செய்த பொலிஸ் அதிகாரி…!

0

அமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அந்த சம்பவத்தின் வீடியோ காட்சியை இரண்டு வாரம் கழித்து சிகாகோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சுமார் ஒன்பது நிமிடம் ஓடக் கூடிய இந்த பாடி கேம் வீடியோ ஒரு காரில் இருந்து அந்த அடையாளம் தெரியாத காவல் அதிகாரி இறங்கி வருவதையும் தோலேடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்வதையும் அதன்பின்னர் துப்பாக்கியால் சுடுவதையும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதன்போது சுடப்பட்ட சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளான்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தையடுத்து பொலிசாரின் அராஜகத்தை விளக்கும் இன்னொரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளமை கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here