13 வயது சிறுவனுடன் திருமணம்! ஆசிரியை செய்த செயல்…

0

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதியை சேர்ந்த ஆசிரியை வாறு 13 வயது சிறுவனை திருமணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியைக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை.

இதனையடுத்து தனது குடும்பத்தாருடன் பூசகர் ஒருவரை சந்தித்துள்ளார் இந்த ஆசிரியை.

இதன்போது அந்த பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும் இதனால் தான் பல வருடங்களாக திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பூசகர்.

இதற்கு மாற்று வழியா ஒரு சிறுவனை பொம்மை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பூசகர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தன்னிடம் படிக்க வரும் மாணவர்களில் ஒரு மாணவரை தெரிவு செய்து அவரை தனது வீட்டில் ஒரு வாரம் தங்கி படிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்த மாணவனின் பெற்றோரும் சம்மதிக்க தனது வீட்டில் தங்கவைத்துள்ளார்.

மாணவன் ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய பின்னரே தனது மகனை அசிரியை பொம்மை திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here