சூம்’மில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவி தற்கொலை! photos

0

மட்டக்களப்பு-அரசடி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய கவிஷாலினி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தாய் தந்தை இருவரும் சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில் சகோதரியுடன் இருந்த சிறுமி Zoom வகுப்பில் அறையில் கல்விகற்றுக் கொண்டிருந்ததாகவும், அத்தருணம் சகோதரி குளிக்கச் சென்று திரும்பி வந்தபோது சிறுமி அறையின் மின்விசிறி பொருத்தும் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து, சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மாவட்ட பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here