127 தொகுதிகளில் 3வது இடத்தில் தமிழர் கட்சி..!

0

இந்தியாவில் தமிழ் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் 3வது இடத்தை பிடித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தி.மு.க – அ.தி.மு.க-வுக்கு அடுத்து படியாக பெரும்பான்மையான தொகுதிகளில் 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மநீம கூட்டணி, அமமுக-தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டியாக பரபரப்பாக நடந்தது.

இதில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக-வுக்கு அடுத்த படியாக யார் மூன்றாவது இடத்தை பிடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 127 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் போது இந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here