இந்தியாவிற்கு சொந்தமான 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலை இத்தாலிருந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
அவலோகிதேஷ்வர பத்மபாணி என்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவிஸ்தான் குண்டுல்பூர் என்ற கோயிலிருந்து சட்டவிரோதமாக திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது.
கையில் தாமரை பூ தண்டை பிடித்தப்படி நிற்கும் இந்த புத்தர் சிலையானது அவலோகிதேஸ்வர என்ற அனைத்து புத்த கருணையையும் உள்ளடக்கியது.
இந்த திருடப்பட்ட சிலையானது கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை இத்தாலியின் மிலன் நகரிலிருந்து மீட்கப்படும் முன் பிரான்சில் உள்ள கலை சந்தையில் சுற்றி திரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தால் இந்த சிலை மிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிங்கப்பூர், உலக கலைப்பொருள் மீட்பு அமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியவை இந்தியாவின் பெருமையை விரைவாக உதவியதாக தெரிவித்துள்ளது.