12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! ஸ்கொட்லாந்தில் அதிரடி

0

ஸ்கொட்லாந்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மக்களிடையே தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வருகின்றது.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்றால் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

அதனால் அந்த அபாயத்தை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், குறைந்த ஆபத்து உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு இப்போது தடுப்பூசி வழங்கப்படமாட்டாது.

இது தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான பிரித்தானியாவின் கூட்டுக் குழுவின் (ஜே.சி.வி.ஐ) சமீபத்திய பரிந்துரைகளைப் பின்பற்றுகிறது.

சுகாதார செயலாளர் ஹம்சா யூசப், தனது இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here