12 வது திருமணத்திற்கு தயாராகும் 52 வயதான பெண்…!

0

அமெரிக்காவின் Utah பகுதியில் வசித்து வருபவர் Monette Dias 52 வயது, இவர் 11 முறை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் 12வது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Addicted To Marriage என்ற நிகழ்ச்சி கலந்து கொண்ட Monette Dias பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில், எனக்கு 2 வயதில் முதல் இந்த ஈர்ப்பு எனக்குள் தோன்றியது.

இதுவரை நான் 28 முறை காதலை சொல்லி உள்ளேன்.

எனது கனவு முழுவதும் எனது திருமணம், மற்றும் என் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவரின் அதிக திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது அவருடைய கிறிஸ்தவ நம்பிக்கை தான் என்று கூறப்படுகின்றது.

அவர் ஒரு பையனுடன் இரண்டு மாதங்கள் டேட்டிங் செய்து அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் அவரது குறுகிய திருமணம் ஆறு வாரங்கள் மட்டுமே நீடித்தது.

இருப்பினும் அவர் காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் 12வது முறையாக திருமணம் செய்து கொள்ள 57 வயதான ஜான் என்ற இரண்டு முறை விவாகரத்து செய்யப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்ததாக மோனெட் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here