11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன்!

0

அமெரிக்காவில் 11 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெக்ஸாஸை சேர்ந்தவர் லூயிஸ் டாமிங்குயிஸ் வயது 18.

இவர் 11 வயது சிறுமி ஒருவரை கடந்த 2 ஆம் திகதி அவர் வீட்டில் இருந்து அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

பின்னர் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக சிறுமி பொலிசில் கூறுகையில், இது போல அடுத்தடுத்து சில நாட்கள் தன்னிடம் லூயிஸ் மிக மோசமாக நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை அடுத்து லூயிஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து லூயிஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here