11 வயதில் தாயான சிறுமி… பிரித்தானியாவில் சம்பவம்

0

பிரித்தானியாவில் 11 வயது சிறுமி தாயான விடயம் பெரும் அதிர்ச்சியை பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் மிக இளவயது தாயார் இவர் என்று நம்பப்படுகிறது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததும் பிள்ளை பெற்றெடுத்துள்ளதும் தங்களுக்கு கடும் அதிர்ச்சியான தகவல் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமது பத்தாவது வயதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

30 வாரங்களுக்கு பிறகு தமது 11ம் வயதில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சமூக சேவைகள் மையம் மற்றும் நகர சபைத் தலைவர்கள் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மிக இளவயது என்பதால் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

தாயும் சேயும் நலமாக இருப்பதால் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

மட்டுமின்றி, கர்ப்பமாக இருப்பதை மக்கள் உணராததன் மர்மம் தங்களுக்கு புரியவில்லை என மருத்துவர்கள் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2006ல் 12 வயதான Tressa Middleton பிள்ளை பெற்றெடுத்ததே பரவலாக பேசப்பட்டது.

மேலும், 2,500 பேர்களில் ஒருவருக்கு தாம் கர்ப்பிணியாக இருப்பது தெரியாது அல்லது மறைத்துவிடுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here