11 நாட்கள் பாலியல் துஸ்பிரயோகம்….. இளம் தாய்க்கு நேர்ந்த கதி

0

எத்தியோப்பியாவின் Tigray-யின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள Adigrat நகருக்கு செல்லும் மினி பேருந்தில்,வீட்டிற்கு செல்வதாக 27 வயது பெண் ஒருவர் தன்னுடைய 4 வயது மகன் மற்றும் 6 வயது மகனுடன் சென்றுள்ளார்.

அப்போது பேருந்து மிகவும் கூட்டமாக இருந்ததுள்ளது.

எத்தியோப்பிய இராணுவ வீரர்கள் பேருந்தில் சோதனை செய்த போது, அந்த பெண்ணை சோதனை என்ற பெயரில் முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின் சுமார் 11 நாட்கள் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் கால் உடைந்து மயக்க நிலையில் வீதி யோரமாக வீசி எறியப்பட்டுள்ளார்.

அவரை கண்ட, அருகில் இருந்த கிராமவாசிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவரை சோதனை செய்த போது, உடலில் அதிகளவில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

ஊன்றுகோல் இல்லாமல் நடக்கவோ அல்லது நீண்ட நேரம் உட்காரவோ முடியாமல் அவர் தவித்து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here