100 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாகிய 5 பேர் பலி….

0

அல்புகெர்க் என்பது சூடான காற்று பலூன்களுக்கு புகழ் பெற்ற இடமாகும்.

அக்டோபர் மாதத்தில் இங்கு 9 நாள் திருவிழா நடத்தப்படும்.

இது உலகம் முழுவதிலுமிருந்து நூறாயிரக்கணக்கான பார்வையாளர்களையும் விமானிகளையும் ஈர்க்கிறது.

இது உலகளவில் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க மாகாணம் நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகெர்க் நகரத்தில் (Albuquerque) ஒரு சூடான காற்று பலூன் மின் கம்பிகளில் மோதியுள்ளது.

2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சனிக்கிழமையன்று காலை 7 மணிக்கு பல வண்ண பலூன் ஒன்று சுமார் 100 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்ததை பார்த்ததாக சில சாட்சிகள் விவரித்துள்ளனர்.

பலூனிலிருந்து பயணிகளின் கூடை பிரிந்து, பின்னர் ஒரு தெருவில் மின் இணைப்புகளில் விழுந்து தீப்பிடித்து இருந்ததாக அல்புகெர்க் காவல் துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 13,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விமானி உட்பட மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இறந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here