10 வயது சிறுமிக்கு கனடாவில் நேர்ந்த துயரம்…

0

கனடாவின் நோவா ஸ்கொடியாவில் வாகனம் மோதி 10 வயது சிறுமி பலியாகியுள்ளார்

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ல் 10 வயதேயான Talia Forrest என்ற சிறுமி வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு காயங்கள் காரணமாக பலியானார்.

இரவு 9.45 மணிக்கு நடந்த குறித்த சம்பவத்தில் தொடர்புடைய 30 வயதான Colin Tweedie, சிறுமி விபத்தில் சிக்கியுள்ளதையும் கவனிக்காமல் சம்பவயிடத்தில் இருந்து மாயமானார்.

சம்பவத்தின் போது, தாலியா தனது தோழியுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தன்று விசாரணையில் ஈடுபட்ட பொலிசார், புதன்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி, குறித்த நபர் மது போதையில் இருந்துள்ளதும் பொலிசாரால் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த விசாரணைக்கு என பத்து நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here