10 ஆண்டுகள் உறங்கிய சிறுமி… வெளியாகிய ஆச்சரியத் தகவல்!

0

19 ஆம் நூற்றாண்டு என்பது உலகம் முழுக்கவே மருத்துவத் துறை, நவீன வளர்ச்சியை கண்டுள்ளது.

மருத்துவத்துறையுடன் சேர்ந்து தொழில்புரட்சிகளும் உண்டானது.

இந்நிலையில் டிரைபானோசோமியாசிஸ்(Ribonosomiasis) எனப்படும் உறக்க வியாதியால் ஒரு சிறுமி அவதியுற்றுள்ளார்.

பிரிட்டனில் 11 வயதாக இருந்த எலன் ஸேட்லர்(Ellen Settler) என்ற சிறுமிக்கு இந்நோய் ஏற்பட்டது.

இவர் 1859ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி பிறந்தவர்.

அதுவும் 12 குழந்தைகளைக் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.

விவசாயியான இவரது தந்தை மிக இளம் வயதிலேயே விபத்து ஒன்றில் காலமானார்.

எலனின் தாய், மறுமணம் செய்து கொண்டார்.

1871ஆம் ஆண்டு வரை எலனுக்கு எந்த குறையும் இல்லை.

திடீரென 11 வயதில் எலன் (Ellen Settler)ஒரு நாள் இரவு உறங்கி, மறுநாள் காலையில் கண்விழிக்கவில்லை.

அவரை பலரும் எழுப்பிப் பார்த்தும் பயனில்லை.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் எலன் வீட்டுக்கு வந்து அவரை எழுப்ப முயற்சித்தனர் ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் உறக்கத்திலிருந்து எழுப்ப மூளைக்குத் தேவையான ஒரேக்ஸின் என்ற வேதிப்பொருள் உருவாகவில்லை.

அதனால்தான் அவர் கண்விழிக்கவில்லை என்பதை மட்டுமே கண்டறிந்தனர்.

ஆனால் கண் விழிக்க வைக்க ஒரு உபாயமும் இல்லை.

இப்படியே பல ஆண்டுகள் கடந்தன.

ஒரு நாள் 1880ஆம் ஆண்டு எலனின் 21-வது வயதில் அவர் திடீரென உறக்கத்தைக் களைத்தார்.

ஆனால் அவரது தாய் அதற்கு முன்பே காலமாகியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் எலன்(Ellen Settler) இப்படி தூங்கிவிடுவாரோ என்று பயப்படாமல், எலன் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு விவசாயியை திருமணம் செய்து கொண்டு 6 பிள்ளைகளுக்குத் தாயானார்.

1901ஆம் ஆண்டு அவர் காலமானார். அவரது பிள்ளைகளில் ஒருவர் தனது தாயைப் பற்றிய இந்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here