ஹோட்டலில் அனுமது மறுப்பு… ரோட்டு கடையில் பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்

0

பிரேசில் அதிபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையோர உணவகத்தில் உணவருந்தினார்.

உலகம் முழுவதும் கோரொனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே அமெரிக்காவில் பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயார்க் சென்றுள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ. இவர் அங்கு சக அமைச்சர்களுடன் இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here