ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்பட்டது

0

அண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிறுமி ஹிஷாலியினின் சரீரரத்தை மீள தோண்டி, 2ஆவது மரண பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுமியின் சரீரம் தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நீதிமன்ற வைத்தியத்துறை தொடர்பான பேராசிரியர் ஜின் பெரேரா தலைமையிலான குழுவே, சிறுமியின் சரீரத்தை மரண பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 2ஆம் பரிசோதனை நிறைவடைந்துள்ள நிலையில், ஹிஷாலினியின் சரீரம் இன்று பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here