ஹாரிபாட்டர் பட நடிகை காலமானார்..

0

பாகுபலி போன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் குவித்த படம் ஹாரிபாட்டர். இப்படத்தில் நடித்த ஹெலன் மெர்க்குரி காலமானார்.

உலகம் முழுவதும் தரமான ஹாலிவுட் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மொழி,. தேசங்களைக் கடந்து அப்படங்களும் அதில் நடித்த நடிகை, நடிகர்களும் மக்கள் மனதில் இடம்பிடிக்கிறார்கள்.

அந்தவரிசையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஹாரிபார்டர். இப்படத்தில் வெளியான அத்தனை பாகங்களும் வசூலை வாரிக்குவித்தன.

இந்நிலையில், ஹரிபாட்டர் படத்தில் நர்சிகா மல்ப்ய் என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஹெலன் மெர்க்குரி. இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த இவருக்கு புற்றுநோய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

52 வயதான ஹெலன் மெர்க்குரி தன் வீட்டிலேயே தங்கி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஹெலன் மெர்க்குரி காலமானதாக அவரது கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹெலன் மெர்க்குரி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here