கனடாவின் ஹமில்டனில் தீ விபத்தில் வர்த்தக கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
ஹமில்டன் கிங்ஸ் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த கட்டடம் முன்னதாக சுகாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
இந்த கட்டடத்தின் பெரும்பகுதி பலகையினால் உருவாக்கப்பட்டதால்தீ வேகமாக பற்றிக் கொண்டு பரவியதாக தீயனைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
தீ வேகமாக பரவிக் கொண்டதனால் தீயனைப்புப் படையினர் கட்டடத்தை விட்டு வெளியேற நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
