ஸ்வீடனில் கோர விபத்து….! பயணிகள் அனைவரும் பலி

0

ஸ்வீடனில் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த விமானி உட்பட அனைவரும் தீயில் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடனின் Orebro நகருக்கு வெளியே வியாழக்கிழமை இக்கொடூர விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் பயணித்த விமானி உட்பட 9 பேர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 8 பேர்கள் பயிற்சி பெற்ற skydivers என தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், ஓடுதளத்தின் அருகே விழுந்த விமானம், அந்த தாக்கத்தில் நெருப்பு கோளமாக மாறியதாக கூறப்படுகிறது.

விமானம் மேலெழும்பி 100 மீற்றர்கள் கடக்கும் முன்னர் விபத்தில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து விரைந்த 10கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

2019ம் ஆண்டும் இதேபோன்று ஸ்வீடனுக்கு வடக்கே, skydivers உடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அதுவும் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது.

இதனிடையே, ஓரிப்ரோவில் விமான விபத்து பற்றிய துன்பகரமான தகவல் மிகுந்த சோகத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது என பிரதமர் Stefan Lofven தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here