ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள்…! மருத்துவர்கள் எச்சரிக்கை

0

ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கையின் குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர இனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தக்கூடியவை.

ஒரு ஸ்மார்ட்போன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும்.

இந்நோய்கள் என்னவெனில் குறிப்பாக மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஏற்படுத்தல், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப்பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.

எனவேநாம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here