ஸ்பெயினில் இளம்பெண்களுக்கு நேர்ந்த கதி….! பொலிஸார் எச்சரிக்கை

0

ஸ்பெயினில் கூட்ட நெரிசல்களில் இளம்பெண்களை குறிவைத்து ஊசி குத்தி தகாத முறையில் நடந்து கொள்வதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியா மற்றும் பிரான்சில் இதே போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாக இது போன்ற ஊசி தாக்குதல்கள் குறித்து காவல்துறை அல்லது சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர விடுதிகள், கிளப்களில் போதைப்பொருள் அல்லது பிற நச்சுப் பொருட்களின் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மேலும் தகாத முறையில் வன்முறை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஸ்பெயின் காவல்துறையின் கூறியுள்ளது.

ஆனால், Catalonia-வில் 23 needle spiking வழக்குகளும், Basque Country-ல் 12 needle spiking வழக்குகளும் பதிவாகியுள்ளன.

Needle spiking என்பது கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு மற்றவர்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் அவர்களது உடலில் ஊசியை செலுத்துவதாகும்.

இளம் பெண்கள் பார்ட்டியில் ஈடுபடும்போது கை அல்லது காலில் ஊசி குத்துவதை உணர்கிறார்கள்.

பின்னர் மயக்கம் அல்லது தூக்கம் ஏற்படுகிறது என்று Basque காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட பொலிஸார், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் பாம்பலோனா காளை ஓட்டும் திருவிழாவின் போது, ​​ஸ்பெயின் தனது முதல் தாக்குதல்களை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு பிரான்சிலும் 2021-ல் பிரித்தானியாவிலும் Needle spiking வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here