ஸ்பெயினில் அமுலுக்கு வரும் கருணை கொலை…!

0

ஸ்பெயினில் தீராத நோயால் பலர் அவதிப்படுகின்றனர்.

அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது பெரும் போராட்டமாகவே இருக்கிறது.

இதனால் இது போன்ற நிலையில் இருப்பவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் சட்டம், ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 202 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

எதிராக 140 வாக்குகள் பதிவாகின.

இந்த கருணைகொலை செய்யும் திட்டம், வரும் ஜுன் மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here