ஸ்காப்ரோ துப்பாக்கிச் சூடு ! பரிதாபமாக பலியாகிய சிறுவன்

0

ஸ்கார்ப்ரோவின் எக்லின்டன் வீதி மற்றும் மிட்லாண்ட் அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 17 வயதான சிறுவன பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த சிறுவன் மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்திருந்த சிறுவனை பொலிசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சைகள் பலனின்றி குறித்த சிறுவன் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான்.

இந்த துப்பாக்கி சூட்டை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அருகாமையில் இருந்த பாடசாலையின் நடவடிக்கைகளை சற்றே இடைநிறுத்த பொலிசார நடவடிக்கை எடுத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here