ஸ்காட்லாந்தில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சட்டம்

0

ஸ்காட்லந்தில் மாதவிடாய்ப் பொருள்களை அனைவருக்கும் இலவசமாக வழங்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உலகில் முதல் முதலாக இலவச மாதவிடாய்ப் பொருள்களுக்கான உரிமை சட்டபூர்வமாய்ப் பாதுகாக்கப்படுவது ஸ்காட்லந்தில் ஆகும்.

அதன்படி மாதவிடாய்ப் பொருள்கள் சட்டத்தின்கீழ் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவை பல்வேறு மாதவிடாய்ப் பொருள்களைக் கழிவறைகளில் இலவசமாக வழங்கவேண்டும்.

2017 ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லந்தின் கல்வி நிலையங்களில் அவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

அதற்காக ஸ்காட்லந்து அரசாங்கம் பல மில்லியன் பவுண்ட் செலவிட்டுள்ளது.

இந்நிலையில் மாதவிடாய்ப் பொருள்களை இலவசமாக வழங்குவது சமத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் முக்கியம் என்று ஸ்காட்லந்தின் சமூக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here