ஷங்கர் மீது ஐதராபாத் ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்த லைகா!

0

பிரபல இயக்குனர் ஷங்கர் மீது ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது என்பது தெரிந்ததே. தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்குனர் ஷங்கர் இயக்க கூடாது என்று வழக்கு பதிவு செய்துள்ளது என்பதும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டை அடுத்து ஹைதராபாத் ஐகோர்ட்டிலும் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இயக்குனர் சஹ்ங்கர் ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை தான் ஷங்கர் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியானதை அடுத்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக லைகா நிறுவனத்தினர் தகவல் வெளிவந்துள்ளது

சென்னை ஐகோர்ட் மற்றும் ஹைதராபாத் ஹைகோர்ட் ஆகிய இரண்டு ஐகோர்ட்டிலும் ஷங்கர் மீது வழக்கு தொடுத்து லைகா நிறுவனம் செக் வைத்துள்ளதால் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here