ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் பஹத் பாசில்?

0

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பஹத் பாசில், தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா என்கிற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். ஆதலால், ஷங்கர் படத்திலும் வில்லனாக நடிக்க அவர் சம்மதிப்பார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here