வௌிநாடு செல்ல தயாராகும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

0
?????????????????????????

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோர் விரைவாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவோருக்கு கட்டாயம் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.

நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

இதேவேளை, குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரமே பணியாளர்கள் ஏற்றியிருக்க வேண்டும் என எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, Pfizer, AstraZeneca, Moderna மற்றும் Sinopharm ஆகிய தடுப்பூசிகளை வௌிநாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here