வௌவால்கள் இடையே புதிய கொரோனா வைரஸ்…. மனிதர்களுக்கிடையே பரவுமா..?

0

சீன ஆராய்ச்சியாளர்கள் குழு, தென் ஆபிரிக்காவில் வௌவால்கள் இடையே புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளனர்.

‘NeoCov’என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கொரோனா வைரஸ், மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.

‘NeoCov’என்ற இந்த கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடும்.

அது தொடர்பில் ஆராய்ச்சிகளை செய்த ஹூஹான் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் நோயான Mers உடன் ‘NeoCov’ நெருங்கிய தொடர்பை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

‘NeoCov’ கொரோனா வைரஸின் தற்போதைய தன்மைக்கு அமைய அது மனிதர்களுக்கு தொற்றாது. எனினும் திரிபடைந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here