வௌவால்களின் உடலில் 39 வகை வைரஸ்கள்… ஆய்வாளர்கள் கணிப்பு

0

விஞ்ஞானிகள் வௌவால்களின் உடலில் காணப்படும் வைரஸ்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகின்றது.

சுவிட்சர்லாந்தில் வாழும் வௌவால்களின் உடலில் காணப்படும் வைரஸ்கள் குறித்து சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முதன்முறையாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Isabelle Hardmeier என்பவர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, சுவிட்சர்லாந்தில் வாழும் 7,000 வௌவால்கள் மீது ஆய்வுகள் நடத்தியுள்ளது.

அந்த ஆய்வில், சுவிட்சர்லாந்தில் வாழும் 18 வகை வௌவால்களின் உடலில், 39 வகை வைரஸ்கள் காணப்படுகின்றன என்னும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும், குறிப்பாக, அவற்றில் 16 வகை வைரஸ்கள் முதுகெலும்புள்ள உயிரிகளுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என தெரியவந்துள்ளது .

வௌவால்களிலிருந்து இந்த முதுகெலும்புள்ள உயிரிகளுக்கு பரவி, அவற்றிற்கு நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களில் சில, அவற்றிலிருந்து மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பரவக்கூடியவை என தெரியவந்துள்ளது.

ஆகவே, இந்த வைரஸ்கள் குறித்து ஆராய்வது, இப்போது ஏற்பட்டுள்ள கொரோனாவைப் போல எதிர்காலத்தில் ஏதேனும் கொள்ளைநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகிறனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here