வைத்தியசாலையில் வெடித்து சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்! நோயாளிகளுக்கு நேர்ந்த நிலை

0

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில், நேற்றிரவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால், குறித்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த விபத்து காரணமாக 82 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 110 பேர் காயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தெரிவிக்கையில், நேற்று முன் தினம் Diyala பாலம் பகுதியில் உள்ள Ibn Khatib மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் திடீரென்று வெடித்ததால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த தீ விபத்தின் போது தன் சகோதரனை காப்பாற்றிய நபர் கூறுகையில், நான் என் சகோதரனை தெருவில் ஒரு எரிபொருள் போன்று இழுத்துச் சென்றேன். அந்தளவிற்கு அவன் மீது தீ பரவியது.

மருத்துவமனையின், கடைசி மாடியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்த தீ விபத்தினால், மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார்.

மருத்துவர்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, மருத்துவமனையின் மேல் இருந்து கார்களில் குதித்ததாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here